

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. விஜய் ஆட்சிக்கு வந்ததும், அவருடைய ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து அரசு வெளியிட்ட உத்தரவு திரும்பப் பெற்றது.
தற்போது வெங்கட நாராயணா என்பவரை தமிழ்நாடு அரசுக்கான டெல்லி பிரதிநியாக தமிழக அரசு நியமித்துள்ளது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இவர் பாலமாக இருந்து செயல்படுவது முக்கிய பணியாகும். ஏற்கனவே தமிழகத்திற்கும் கர்நாடகா அரசுக்கும் இடையில் மேகதாது அணை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்தவரான வெங்கட நாராயணாவை நியமிக்க வேண்டுமா? என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் அதற்கு தகுதியான நபர் இல்லையா? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
நிறைய பேர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ல. கர்நாடகாவில் சென்று தொழில் செய்து வருகிறார். ஆந்திராவை சேர்ந்தவர். அவர் டெல்லிக்கான பிரதிநிதியாக இருக்கப் போகிறார். பெரிய முடிவுகளை எடுக்கப்போவதில்லை. முக்கியமான விசயம் என்னவென்றால், கடினமான நேரத்தில் மிகவும் உறுதியாக நின்றவர். மிகவும் நம்பிக்கையானவர். தவறான நபருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த காலத்தில் பல அழுத்தங்கள் அவருக்கு வந்தன. தலைவர் (விஜய்) மற்றும் எங்கள் மீது பல குற்றச்சாட்டுகளை கூற அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. அதையெல்லாம் தாண்டு உறுதியாக நிற்பவர். அவர் பெரிய முடிவுகளை எடுக்கப்போவதில்லை, ஒப்புதல் கொடுக்கப்போவதில்லை. மத்திய மற்றும் தமிழ்நாட்டுக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கப் போகிறார். டெல்லியில் பிறந்தவர்கள், அங்கே இருந்தவர்களையெல்லாம் போட்டிருக்கிறார்கள்.
இந்த பொறுப்பு முதலில் அலங்காரமாக இருந்தது. எம்.எல்.ஏ., மக்களவை தேர்தலில் தோற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டது. தற்போது நம்பிக்கையானவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பணம் பெரிய விசயம் கிடையாது. இந்த பொறுப்புதான் பெரிய விசயம் கிடையாது. நம்பிக்கையானவர்.