அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசுப்பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

சென்னை:

பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி,

* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* தமிழக அரசுப்பணியில் சி மற்றும் டி பிரிவில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 மிகை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* முழு மற்றும் பகுதிநேர பணியாளர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

* சி, டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், தனி என அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com