சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவியாளர்- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

ஆளுநரின் பாதுகாப்பு பணிக்காக காவல் உதவியாளர் செந்தில்குமார் சென்றிருந்தார்.இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி செந்தில் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவியாளர்- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
Published on

தஞ்சை மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செந்தில் குமார்.

தஞ்சை தமிழ் பல்லைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த ஆளுநரின் பாதுகாப்பு பணிக்காக செந்தில்குமார் சென்றிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் பாப்பாநாடு பகுதி வழியே சென்றபோது கறம்பியம் அருகே லாரி மோதி செந்தில் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவியாளரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

அதன்படி, காவல் உதவியாளரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com