

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ.9,818 கோடி ஒதுக்கீடு
* சமூக நீதித்துறைக்கு ரூ.3937 கோடி ஒதுக்கீடு
* ஆன்றோர் மேம்பாட்டுத்திட்டம் ரூ.250 கோடி ஒதுக்கீடு
* மண்ணின் மகள் திட்டம் ரூ.20 கோடி ஒதுக்கீடு
* தமிழகம் முழுவதும் ஆயிரம் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு
* கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு
* சுகாதாரத்துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு.
* தமிழக பட்ஜெட்டில் கூட்டுறவுத்துறைக்கு ரூ.8,028 கோடி ஒதுக்கீடு
* டெலி மெடிசன் நெட்வொர்க் உருவாக்க ரூ.18.5 கோடி நிதி ஒதுக்கீடு
* விவசாயிகளின் மின் மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை தொகுப்பு திட்டத்திற்கு ரூ.134 கோடி ஒதுக்கீடு
* ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு
* வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் 5 வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு 100 சதவீத மானித்துடன் வழங்கப்படும்.
* வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் பெண்களுக்கு 5 ஆடுகள் வழங்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.