

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* போட்டி தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்காக ரூ.3.38 கோடி ஒதுக்கீடு
* TN சுடர் திட்டத்தில் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள், 1 லட்சம் நவீன படுக்கை வசதிகள் உருவாக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு
* 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் மாணவர்களுக்கு AI வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு
* அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 5.32 லட்சம் ஜென்சி மாணவர்களுக்கு நவீன மிதி வண்டி வழங்க ரூ.272 கோடி ஒதுக்கீடு
* பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டு பயிற்சி வழங்கப்படும்.
* விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு
* காலை உணவுத்திட்டத்திற்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு
* காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.170 கோடி ஒதுக்கீடு
* முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் திட்டம் என பெயர்வைத்து பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் விஜய். காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
* தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம்.
* அண்ணனின் சீர் திட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம், பட்டு சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டம் அமல்படுத்தப்படும்.
* 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்- ரூ.50 கோடி ஒதுக்கீடு
* கிராமிய விளையாட்டு போட்டித்திட்டம் ரூ.42 கோடி ஒதுக்கீடு
* இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1051 கோடி ஒதுக்கீடு
* தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1485 கோடி ஒதுக்கீடு
* யோகா உள்ளிட்டவையுடன் உருவாக்கப்படும் முதியோருக்கான இல்லங்கள் 12 மாவட்டங்களில் அமைக்க ரூ.6.6 கோடி ஒதுக்கீடு
* கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டம் செயல்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
* உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு
* புதிதாக 5 தொழிற்பள்ளி நிலையங்கள் நிறுவ தமிழக பட்ஜெட்டில் ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* வெற்றி திறன் பயிற்சி திட்டத்திற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு.
* அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ஏஐ புதிய தொழிற்பிரிவு உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
* மின்சார வாகனம் மற்றும் மின்கலன் பராமரிப்பு பயிற்சிக்கு ரூ.3 கோடி ஒதுக்கிடு
* பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி அளிக்கப்படும்.