இந்த முறை பருவமழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்- துணை முதல்வர் உதயநிதி

பருவமழை முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.19 இடங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.
udhayanithi stalin
Published on

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "பருவமழை தொடர்பாக ஒருவாரத்திற்கு முன்பு முதலமைச்சர் தலைமையில் ஒரு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தற்போது மீண்டும் மூத்த அதிகாரிகளின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

பருவமழை முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்த முறை பருவமழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

19 இடங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறும். வெற்றி பெற்ற வீரர்களுக்கு அக்டோபர் 24 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு கோப்பைகளை வழங்குவார்.

முதலமைச்சர் கோப்பையில் பங்குபெறும் விளையாட்டு வீரர்களுக்கான தங்குமிட வசதிகள் போக்குவரத்து வசதிகள் உணவு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com