நாளை முதல் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவிப்பு.வேலை நிறுத்தத்தில் மொத்தம் 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
நாளை முதல் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் போராட்டம்
Published on

வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனால், வேலை நிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என கருதப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com