17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தேசிய கீதத்துடன் நிறைவு

தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை அப்படியே மாற்றமின்றி சட்டசபையில் ஆளுநர் அர்லேகர் வாசித்தார்.
TN Assembly
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தொடர்ந்து அடுத்ததாக தேசிய கீதம் பாடப்பட்டது.

17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் தனது உரையை தொடங்கினார்.

அதன்படி, பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் வணக்கம் எனக்கூறி தமிழில் உரையாற்றி பின்னர், ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள் என்ற அண்ணாவின் வார்த்தைகள் மற்றும் அம்பேத்கர் பெயர்களை குறிப்பிட்டு ஆளுநர் உரையாற்றினார்.

தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை அப்படியே மாற்றமின்றி சட்டசபையில் ஆளுநர் அர்லேகர் வாசித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசின் உரை வாசிக்கப்படாதது பேசுபொருளான நிலையில் புதிய ஆளுநர் உரையை அப்படியே வாசித்தார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளை குறிப்பிட்டு தனது உரையை ஆளுநர் அர்லேகர் நிறைவு செய்தார்.

பின்னர், தமிழக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் ஆளுநரின் உரையை தமிழில் மொமிழபெயர்த்ததை தொடர்ந்து, தேசிய கீதத்துடன் இன்று 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நிறைவு பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com