மொழி அடிப்படையில் தமிழ்நாடு மாநிலம் உருவான தினம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

இந்தியாவின் எல்லைகள் மொழி அடிப்படையில் மறுசீரமைத்து, 1956 ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் 1956 நவம்பர் 1 அன்று நடைமுறைக்கு வந்தது.
CM Vijay
Published on: 
Summary

தமிழ்நாடு மொழிவாரி அடிப்படையில் நவம்பர் 1, 1956 அன்று பிரிக்கப்பட்டு மாநிலமாக உருவான இந்த நாளில், தமிழகத்தின் வரலாற்று சிறப்புகளை போற்றி மகிழ்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் எல்லைகள் மொழி அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்டு, 1956 ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் 1956 நவம்பர் 1 அன்று மாநிலமாக நடைமுறைக்கு வந்தது.

இதனடிப்படையில் மலையாள மொழி பேசும் பாலக்காடு மற்றும் மலபார் ஆகிய மாவட்டங்கள் மெட்ராஸ் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டன.

அதேபோன்று கன்னட மொழி பேசும் பெல்லாரி, மங்களூர் மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகள் கர்நாடகா மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.

சென்னை மாநகரம் அகஸ்தீஸ்வரம், தோவாலை, கல்குளம் மற்றும் விதிவங்கோடு ஆகிய பகுதிகளை இணைத்துக்கொண்டது. மேலும் செங்கோட்டையை இணைத்து கன்னியாகுமரி மாவட்டம் உருவானது.

இந்த நிலையில் நவம்பர் 1,1956 அன்று மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மாநிலமாக உருவான தினத்திற்கு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்த நன்னாளில், நம் தமிழகத்தின் தனி பெருமைகளையும், வரலாற்று சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாக திகழும்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த நன்னாளில், அன்னை தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பேணிக்காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளை தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X