4 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா பின்னணியை ஆராய வேண்டும்..!– அதிமுக எம்பி தனபால்

ஜனநாயகத்தை காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
4 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா பின்னணியை ஆராய வேண்டும்..!– அதிமுக எம்பி தனபால்
Published on

அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும் என அதிமுக எம்.பி. தனபால் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

த.வெக.-விற்கு தனி மெஜாரிட்டி இல்லாத சூழலில், அண்ணா திமுக வை உடைக்க நினைத்தும் முடியாத நிலையில், பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும்.

மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல். ஜனநாயகத்தை காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com