ரொம்ப தேங்க்ஸ் ரஜினி, இப்போதாவது மறக்காம பேசுனீங்களே..! துரைமுருகன்

ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்தான் ஒரு இயக்கத்தின் தூண், சிகரம். அவங்களோட அனுபவம்தான் பெரிய பலம் அப்டிங்றத சொல்ல மறந்துட்டேன்.ரஜினிகிட்ட போனில் பேசினேன். ரொம்ப தேங்ஸ் ரஜினி. இப்போதாவது மறக்காம பேசுனீங்களேன்னு சொன்னேன்.
ரொம்ப தேங்க்ஸ் ரஜினி, இப்போதாவது மறக்காம பேசுனீங்களே..! துரைமுருகன்
Published on

சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் விற்பனையில் 1 லட்சம் பிரதிகளைக் கடந்திருப்பதைக் கொண்டாடும் வகையில், வேள்பாரி வெற்றிப் பெருவிழா கடந்த வெள்ளியன்று நடந்திருந்தது.

அதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். ரஜினிகாந்த் பேசுகையில், 'எ.வ.வேலுவோட புத்தக வெளியீட்டு விழாவில், திமுக-வில் ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்களை சமாளிக்கிறது கஷ்டம்னு பேசியிருந்தேன். அதுக்கு கிடைச்ச கைத்தட்டுல, அடுத்து சொல்ல வந்த 'ஆனாலும் ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்தான் ஒரு இயக்கத்தின் தூண், சிகரம். அவங்களோட அனுபவம்தான் பெரிய பலம் அப்டிங்றத சொல்ல மறந்துட்டேன்" என நகைச்சுவையாகப் பேசியிருந்தார்.

திமுகவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வேலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ரஜினிகாந்தின் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு துரைமுருகன் "ரஜினிகிட்ட போனில் பேசினேன். ரொம்ப தேங்ஸ் ரஜினி. இப்போதாவது மறக்காம பேசுனீங்களேன்னு சொன்னேன்" என பதில் அளித்தார்.

முன்னதாக,

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, "ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் புதிய மாணவர்களை எளிதாக சமாளித்துவிடுவார்கள். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமில்லை. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டுசெல்ல மாட்டேன் என்று அமர்ந்துள்ளனர். அமைச்சர் துரைமுருகன் கருணாநிதி கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர்" என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த்திடம் இந்த பேச்சு திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, "வயதானவர்கள் எல்லாம் நடிப்பதால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது" என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ரஜினிகாந்த் கூறுகையில் "துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும், எனக்கு வருத்தம் இல்லை. எங்கள் நட்பு எப்போதுமே தொடரும்" எனத் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com