பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ.

தங்க தமிழ்ச்செல்வனுடன் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரும் உடன் சென்றார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ.
Published on

பெரியகுளம்:

பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது மகள் திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுக்க அவரது வீட்டிற்கு சென்றார்.

தங்க தமிழ்ச்செல்வத்தின் மகள் டாக்டர் சாந்திக்கும், சுப்பிரமணியனுக்கும் வருகிற 20-ந்தேதி திருமணம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருமண அழைப்பிதழை வழங்க தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றார். அவரை ஓ.பன்னீர்செல்வம் இன்முகத்துடன் வரவேற்றார்.

தங்க தமிழ்ச்செல்வனுடன் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரும் உடன் சென்றார். அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் மகள் திருமணத்துக்காக ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு தங்க தமிழ்ச்செல்வன் சென்றது இரு கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com