ரூட் தல விவகாரம்- பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடாவடி

கடந்த 5-ந்தேதி ரூட் தல விவகாரத்தில் பேருந்து மீது ஏறி மாணவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
ரூட் தல விவகாரம்- பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடாவடி
Published on

குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியிலிருந்து பேருந்து ஏறும் மாணவர்களில் யாராவது ஒருவர் தன்னை உயர்வாகக் காட்டிக் கொண்டு, மற்றவர்களை அடக்கியாள நினைத்தால் அவர் 'ரூட் தல' என்று கூறப்படுகிறார். குறிப்பிட்ட அந்த வழியில்ரூட்டு தல யார் என்பதில் தான் மாணவர்களிடையே போட்டி நிலவுகிறது.

இந்த ரூட் தல விவகாரத்தில் மாணவர்கள் அவ்வப்போது இருதரப்பாக மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்தமோதலை தடுக்க போலீசார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ரூட் தல விவகாரத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5-ந்தேதி ரூட் தல விவகாரத்தில் பேருந்து மீது ஏறி மாணவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

பிராட்வே- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பட்டாசு வெடித்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் உள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com