பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் ஓ.பன்னீர்செல்வம்

பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும்.அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.
பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் ஓ.பன்னீர்செல்வம்
Published on

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தீர்மானம் நிராகரிப்பை அறிவித்தனர்.

பின்னர், பேசிய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவித்தார்.

இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com