பா.ஜனதாவில் இருந்து கவுதமி விலகியது வருத்தம் அளிக்கிறது: குஷ்பு கருத்து

சுயநலமில்லாத கடின உழைப்பாளியாக பா.ஜனதாவில் பணியாற்றினார்.கவுதமியின் எதிர்கால திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள்.
பா.ஜனதாவில் இருந்து கவுதமி விலகியது வருத்தம் அளிக்கிறது: குஷ்பு கருத்து
Published on

சென்னை:

நடிகை கவுதமி பா.ஜனதாவில் இருந்து விலகினார். கனத்த இதயத்துடன் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்து இருந்தார்.

கவுதமி கட்சியில் இருந்து விலகினாலும் அவருக்கு துணை நிற்போம் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இந்த நிலையில் கவுதமி விலகல் குறித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தனது வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எனது சக உறுப்பினரான கவுதமி பா.ஜனதாவில் இருந்து வெளியேறியது வருத்தமாக உள்ளது. அவர் நல்ல பண்பாளர். சுயநலமில்லாத கடின உழைப்பாளியாக பா.ஜனதாவில் பணியாற்றினார். அவரது எதிர்கால திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com