மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.உடற்தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.50 சென்டிமீட்டர் ஆண்களும், 152 சென்டி மீட்டர் பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
Published on

சென்னை:

சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்திய விமானப் படையில் அக்னி வீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

வயது வரம்பு 27.6.2003 முதல் 27.12.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2வுக்கு சமமான தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ்) 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

உடற்தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.50 சென்டிமீட்டர் ஆண்களும், 152 சென்டி மீட்டர் பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

இப்பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.30 ஆயிரம் மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வும் வழங்கப்படும். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணைய தளத்திலும் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு 044-24615160 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com