ஆவடிக்கு மெட்ரோ ரெயில்- திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் அறிவிப்பு

போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரெயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆவடிக்கு மெட்ரோ ரெயில்- திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் அறிவிப்பு
Published on

சென்னை:

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் வரையில் ஒரு வழித்தடத்திலும், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் சிறுசேரி- கிளாம்பாக்கம், பூந்தமல்லி- பரந்தூர், கோயம்பேடு- ஆவடி ஆகிய 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

கோயம்பேடு- ஆவடி மெட்ரோ சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.

119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரெயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com