இஸ்ரோ வர்ணனையாளர் வளர்மதி மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

தமிழகத்தை சேர்ந்த வளர்மதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இஸ்ரோ ராக்கெட் ஏவும்போது அதுகுறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்தார்.
இஸ்ரோ வர்ணனையாளர் வளர்மதி மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
Published on

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்த வளர்மதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த Mission Range Speaker திருமதி. வளர்மதி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்."

"மிகவும் சவாலான ஒரு பணியைத் திறம்படக் கையாண்டு. இஸ்ரோவின் முக்கியத் திட்டப் பணிகளுடைய வெற்றித் தருணங்களின் குரலாக ஒலித்த திருமதி வளர்மதி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவரது பணியிடத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com