அதிமுக பொதுக்குழு கூட்டம்- ஈசிஆரில் நடத்த முடிவு

ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம்- ஈசிஆரில் நடத்த முடிவு
Published on

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஆதிமுக சார்பில் கடந்த 23-ம் தேதி அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்காக, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர். இதற்கு மத்தியில் தொடங்கிய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் ஈசிஆரில் உள்ள விஜிபி அரங்கில் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக, அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com