காய்கறி விலை உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நாளை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.போராட்டத்தில் ஒருங்கிணைந்த சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
காய்கறி விலை உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை:

காய்கறி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது.

சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

போராட்டத்தில் ஒருங்கிணைந்த சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், விருகை ரவி, வெங்கடேஷ்பாபு, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், எம்.கே.அசோக், கே.பி.கந்தன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com