சென்னையில் 4 உதவி போலீஸ் கமிஷனர்கள் மாற்றம்

சென்னையில் 4 உதவி போலீஸ் கமிஷனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தலைமை அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் புலனாய்வு உதவி கமிஷனராக பணிபுரியும் கண்ணன் வேப்பேரி போலீஸ் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டு உள்ளார்.
சென்னையில் 4 உதவி போலீஸ் கமிஷனர்கள் மாற்றம்
Published on

சென்னை:

சென்னை போலீஸ் காவல் ஆணையரகம் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட தரமணி உதவி கமிஷனராக பணியாற்றும் ஜீவானந்தம் தெற்கு பகுதி தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு உதவி கமிஷனராகவும், தாமஸ் மவுண்ட் உதவி கமிஷனர் அமீர் அகமது தரமணிக்கும், சிலை கடத்தல் பிரிவு உதவி போலீஸ் கமிஷராக (சி.ஐ.டி.) இருக்கும் மோகன் ராயப்பேட்டை உதவி கமிஷனராகவும் தலைமை அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் புலனாய்வு உதவி கமிஷனராக பணிபுரியும் கண்ணன் வேப்பேரி போலீஸ் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com