விளையாட்டுத்துறையின் தலைநகரமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்- உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் கோப்பைக்கான நிதியை உயர்த்துவதற்கான கோப்பில்தான் முதலில் கையெழுத்திட்டேன்.தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் சென்ற 6 வீரர்களில், 4 பேர் பதக்கங்கள் பெற்றனர்.
விளையாட்டுத்துறையின் தலைநகரமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்- உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா நடைபெற்றது.

இதில், விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

துணை முதலமைச்சரான பின், நான் இட்ட முதல் கையெழுத்து முதலமைச்சர் கோப்பைக்கானது.

முதலமைச்சர் கோப்பைக்கான நிதியை ரூ.82 கோடியாக உயர்த்துவதற்கான கோப்பில்தான் முதலில் கையெழுத்திட்டேன்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் சென்ற 6 வீரர்களில், 4 பேர் பதக்கங்கள் பெற்றனர்.

இந்தியா விளையாட்டுத்துறையின் தலைநகரமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com