15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

பயிற்சி மற்றும் ஆரம்பக்கட்ட பணிகளை முடித்த இந்த இளம் அதிகாரிகளுக்கு, முக்கிய சப்-டிவிஷன்களில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது.
15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
Published on

தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

  • அதன்படி, தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ஏ.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பட்டுக்கோட்டை உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பி.அங்கிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.அஸ்வினி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • திருநெல்வேலி ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பிஸ்வாஜித் பண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக டிஜே. சத்ரிய கவின் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.இன்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • திண்டுக்கல் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பி.மஞ்சுமா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக மண்ணம் சுஜித் சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக நீல் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • ராமநாதபுரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக கே.நேகா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • நாகப்பட்டினம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பிரியங்கா பார்கவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • திருவண்ணாமலை ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ராகுல் வி கோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக சைந்தானே ஸ்வப்னிலா அனில் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக தனூ சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • மதுரை மாநகரம், அண்ணா நகர் சரகத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் புனியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com