10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

அபின் தினேஷ் மொடக்கிற்கு பதிலாக சிபிசிஐடி டிஜிபியாக பால நாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
Published on: 

தமிழ்நாட்டில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி.,

அபின் தினேஷ் மொடக்கிற்கு பதிலாக சிபிசிஐடி டிஜிபியாக பால நாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பால நாகதேவி வகித்த சைபர் கிரைம் ஏடிஜிபி பொறுப்பிற்கு அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிஐடியின் க்யூ பிராஞ்ச் எஸ்.பி.யாக ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிஐடி சிறப்புப் பிரிவு எஸ்பியாக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா நகர் காவல்நிலைய துணை ஆணையராக அர்பிதா ராஜ்புட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கமாண்டோ எஸ்.பி.யாக ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகை கடலோர பாதுகாப்புப் பிரிவு எஸ்பியாக செந்தில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com