

தமிழ்நாடு அரசு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.3.54 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
234 சட்டமன்ற தொகுதிக்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3.54 கோடி வீதம் ரூ.828.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றவும், தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை விரைவுபடுத்தவும் இந்த நிதி விடுவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான 18% ஜிஎஸ்டி வரியை அரசே ஏற்கும் கடந்த திமுக ஆட்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுதல், சுகாதாரம், தொகுதிக்கான அடிப்படை வசதிகள், குடிநீர், பொதுக்கட்டடம் தொடர்பான பணிகள் இந்த நிதியின் கீழ் மேற்கொள்ளப்படலாம்.