ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில்

மங்களூருவில் இருந்து வருகிற 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (06128) இயக்கப்படுகிறது.
ரெயில்
ரெயில்
Published on

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில், சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். சென்ட்ரல் - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்-மங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 28-ந் தேதி இரவு 11.50 மணிக்கு மங்களூருவிற்கு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06127) இயக்கப்படுகிறது.

அதே போல, மங்களூருவில் இருந்து வருகிற 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (06128) இயக்கப்படுகிறது.

முக்கிய நிறுத்தங்கள்

இந்தச் சிறப்பு ரெயில்கள் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, ஷோரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணூர், பய்யன்னூர், நீலேஸ்வரம், காஞ்ஞங்காடு மற்றும் காசர்கோடு ஆகிய முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com