

மற்ற நாட்களில் தேவைக்கேற்ப சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் நேற்று முதல் வருகிற செப்டம்பர் 10-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
வேளாங்கண்ணி மாதா கோவிலில் 29-ந் தேதி (நாளை) கொடியேறுவதை முன்னிட்டு 28-ந் தேதி (இன்று) சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 150 சிறப்பு பேருந்துகளும், 29-ந் தேதி வேளாங்கண்ணியிலிந்து சென்னைக்கு 150 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
அதே போல் செப்டம்பர் 8-ந் தேதி கொடி இறங்குவதை முன்னிட்டு சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
மற்ற நாட்களில் தேவைக்கேற்ப சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.