திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

அதிகரித்து வரும் பயணிகளின் கூட்டத்தை நிர்வகிக்கும் வகையில் இந்த விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Southern Railway adds extra AC coach
Published on

தெற்கு ரயில்வே அறிவிப்பு:

சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் இரண்டு நீண்ட தூர வாராந்திர விரைவு ரயில்களில், ஒரு குளிர்சாதன மூன்று அடுக்கு பெட்டியை நிரந்தரமாக சேர்த்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் பயணிகளின் கூட்டத்தை நிர்வகிக்கும் வகையிலும், பயணிகளின் தங்குமிட வசதிகளை மேம்படுத்தவும் இந்த விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நவயுக் எக்ஸ்பிரஸ்:

அதன்படி ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் நவயுக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று முதல் கூடுதல் குளிர்சாதன மூன்று அடுக்கு பெட்டி சேர்க்கப்பட்டது.

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்:

மேலும் கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா வரை இயக்கப்படும் ஹிம்சாகர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை முதல்(ஜூன் 19) கூடுதல் ரயில் பெட்டி இணைக்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ராவில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் ஹிம்சாகர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூன் 22 முதல் கூடுதல் ரயில் பெட்டி இணைக்கப்பட உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com