

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக முன்னாள் எம்.பி. செஞ்சி. ஏழுமலையை நியமித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆரணி மக்களவைத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏழுமலை அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்தார். ஆனால் 2021-ல் கட்சிக்கு எதிராகப் பேசியதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் ஓபிஎஸ்-ன் உரிமை மீட்புக் குழுவின் விழுப்புரம் மாவட்டச் செயலாளராக இருந்தார். ஓபிஎஸ் திமுகவில் இணைய கடந்த மார்ச் மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.