வலிமை படம் வெளியிட தாமதம்-தியேட்டரில் கண்ணாடி உடைப்பு

வலிமை படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால் தியேட்டரில் கண்ணாடியை உடைத்து ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
தியேட்டரில் பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.
தியேட்டரில் பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.
Published on

சேலம்:

அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் இன்று வெளியானது. சேலத்தில் சுமார் 25 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆனது. சேலத்தில் ஒரு தியேட்டரில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தியேட்டர் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.

 ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த  திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் 4 மணிக்கு திரையிடுவதற்கு பதிலாக 5 மணிக்கு திரையிடப்படும் என அறிவிப்பு வெளியானது.

காலதாமதம் ஏற்ப்பட்டத்தால் ஆவேசம் அடைந்த ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு இருந்த பொருட்களை சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தியேட்டர் முன்பு இருந்த கண்ணாடி மேற்கூரை போன்றவற்றை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com