

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் கருக்கல்வாடி பகுதியை சேர்ந்த சண்முகப்பிரியா (21), சித்ரா (42), விஜயா (46), மீனா (25), வெண்ணிலா( 26) உள்பட 6 பேர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை திறந்து திடீரென மண்எண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி கேனை பறிமுதல் செய்து விசாரித்தனர். அப்போது சண்முகப்பிரியா என்ற பெண் கூறியதாவது:-
தறி தொழில் செய்து வரும் நாங்கள் வசிக்கும் இடத்திற்கு செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்ட முயற்சி செய்கின்றனர். இதனால் நாங்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பெரியவர்கள் எங்கும் வெளியே செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இது குறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வழித்தடம் இல்லாததால் வீட்டிலேயே முடங்கும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழித்தடத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.