காங்கிரஸ் புத்தகத்தில் காவி நிறம் ஏன்? - தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் காங்கிரஸ் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
TamilNadu Assembly
Published on

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சரவை கொள்கை விளக்கப் புத்தகத்தின் அட்டைப்பட நிறம் குறித்து சுவாரசியமான காரசார விவாதம் ஒன்று நடைபெற்றது.

தங்கம் தென்னரசுவின் கேள்வி

சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமாரின் துறை சார்ந்த கொள்கை விளக்கப் புத்தகத்தின் அட்டையில் காவி நிறம் பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் துறை புத்தகத்தில் காவி நிறம் ஏன் இடம்பெற வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஆதவ் அர்ஜுனாவின் விளக்கம்

இதற்கு உடனடியாகப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அட்டைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிறம் தேசியக் கொடியில் உள்ள முதன்மை நிறத்தையே குறிக்கிறது என்றும், இதில் வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

காங்கிரஸின் நிலைப்பாடு

இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் அமைச்சர் விசுவநாதன், "வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கை. வண்ணம், மொழி, உணவு, கலாச்சாரம் என எதிலும் எங்களுக்குள் வேறுபாடுகள் கிடையாது. எனவே, இதுபோன்ற விஷயங்களை திட்டமிட்டு சர்ச்சையாக பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்து விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com