மருத்துவ படிப்பு வசிப்பிட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சட்ட திருத்தம் தேவை- ராமதாஸ்

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15-ம் பிரிவில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ படிப்பு வசிப்பிட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சட்ட திருத்தம் தேவை-  ராமதாஸ்
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைகையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வசிப்பிட அடிப்படையிலான ஒதுக்கீடுகள் எதுவும் கூடாது என்றும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்களுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாடு போன்ற வலுவான மருத்துவக் கல்வி கட்டமைப்பு கொண்ட மாநிலங்களின் மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை இடங்களை பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாரை வார்க்க இந்த சட்டம் வழிவகை செய்யும். இது மாநில உரிமைகளுக்கு எதிரானது.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமைகளைக் காக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15-ம் பிரிவில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com