

பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி தந்தை ராமதாசை சந்தித்து பா.ம.க. தலைவர் அன்புமணி வாழ்த்து பெற்றார்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் மனைவியுடன் ராமதாஸ் பங்கேற்றார். விழா மேடையில் மனைவி மற்றும் மகனுடன் அமர்ந்து ராமதாஸ் பேசியதாவது:-
* எனது 88-வது பிறந்தநாளான இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்.
* அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன், பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார்.
* தலைசுற்றல் இருந்ததால் 20 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன் என்றார்.
பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.