சென்னை ஐஐடியில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ பாதையையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
 Ilaiyaraaja-Narendra Modi
Published on: 
Summary

சென்னை ஐஐடி வளாகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

சென்னைக்கு வரும் அக்டோபர் 11-ஆம் தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, தலைநகரின் போக்குவரத்து மேம்பாட்டுக்கான முக்கியத் திட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தட மெட்ரோ ரெயில் சேவையைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதே பயணத்தின் ஒரு பகுதியாக, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள Prime Minister Narendra Modi inaugurates the Ilaiyaraaja Music Research Centre at IIT Madras!இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை’ திறந்து வைக்கிறார்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை 10.55 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தை அடையும் பிரதமர், அங்கிருந்து காலை 11.30 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லி சென்றடைகிறார். பூந்தமல்லியில் நடைபெறும் விழாவில் சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் 14.64 கிலோமீட்டர் நீளமுள்ள பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ பாதையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, புதிய மெட்ரோ ரெயிலில் பயணித்து போரூர் வரை செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை ஐஐடி வளாகத்தை சென்றடைகிறார்.

இசை ஆராய்ச்சி மையம் திறப்பு

சென்னை ஐஐடி வளாகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதைத் தொடர்ந்து, ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இசை ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதத்தில் சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ‘ஐஐடிஎம் - இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ என்ற பெயரிலான இந்த மையத்திற்கு 2024-இல் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள இந்த இசை ஆராய்ச்சி மையம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாரம்பரிய இசையை இணைத்து ஆய்வு செய்யும் தளமாக இயங்கவுள்ளது. இங்கு இசைக்கருவிகளின் வடிவமைப்பு, ஒலி அலைகளின் அறிவியல் பகுப்பாய்வு, இசைக் கல்விக்கான சான்றிதழ் பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஐஐடி வளாகத்தில் நடைபெறும் திறப்பு விழா நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பின்னர், அன்றைய தினமே பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com