மாலைமலரில் கண் பதித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்: வைரலாகும் புகைப்படம்

தேர்தல் முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றதுடி.ஆர். பாலு மற்றும் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்
மாலைமலர் நாளிதழை முதலமைச்சர் வாசிக்கும் போது எடுத்த படம்.
மாலைமலர் நாளிதழை முதலமைச்சர் வாசிக்கும் போது எடுத்த படம்.
Published on

2024ல் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் படியூரில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் (poll booth agents) கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் தி.மு.க.வின் மாநாட்டை போல சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், அவருடன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முக்கிய மாலை நாளிதழான 'மாலைமலர்' பிரதியை ஆர்வத்துடன் படித்து கொண்டிருந்தார்.

மாலைச்செய்திகளை எளிமையாகவும், நடுநிலையுடனும் முந்தி தருவதில் தமிழ்நாட்டின் முதன்மையான நாளேடான, தினத்தந்தி குழுமத்தின் 'மாலைமலர்', முதல்வர் கையில் இடம்பெற்றிருந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com