பெரியார் கவுன்சிலராக கூட ஆசைப்படவில்லை - ஆர்.எஸ்.பாரதி

நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் முதலமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறான். பெரியார் கவுன்சிலருக்கு நின்றாரா? எம்.எல்.ஏ.விற்கு நின்றாரா?
பெரியார் கவுன்சிலராக கூட ஆசைப்படவில்லை - ஆர்.எஸ்.பாரதி
Published on

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "ஒரு தாடி வைத்த கிழவன் இந்த நாட்டில் தோன்றாமல் இருந்திருந்தால் நாங்கள் எல்லாம் பிச்சைக்காரர்களாக இருந்திருப்போம். நாங்கள் இன்று மேடை போட்டு உட்கார முடியுமா? பெண்கள் நார்காலியில் அமரமுடியுமா?

பெரியார் கவுன்சிலருக்கு நின்றாரா? எம்.எல்.ஏ.விற்கு நின்றாரா? எம்.பி.க்கு நின்றாரா? முதலமைச்சர் ஆகா வேண்டும் என்று ஆசைபட்டாரா?

நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் முதலமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறான். ஆனால் ஒரு சமுதாயத்திற்கே தலைவராக இருந்த பெரியார் கவுன்சிலராக கூட ஆசைப்படவில்லை" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com