பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு- 35 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

இந்த ஆண்டு சூப்பர் எல்நினோ தாக்கத்தால் மழை முற்றிலும் இன்றி மூல வைகையாறு வறண்டது.
Vaigai Dam
Published on

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

மேலும், முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு வனப்பகுதிகளில் பெய்யும் மழை மூலம் வைகையாறு வழியாக வைகை அணையை வந்து சேருகிறது.

மேலும் முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இந்த ஆண்டு சூப்பர் எல்நினோ தாக்கத்தால் மழை முற்றிலும் இன்றி மூல வைகையாறு வறண்டது. இதனால் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

தற்போது கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் முல்லை பெரியாறு அணை நீர்–மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இதனால் வைகை அணையில் தண்ணீர் தேக்குவதற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை அணையின் நீர்மட்டம் 34.97 அடியாக உள்ளது. 220 கன–அடி நீர் வருகிற நிலையில் குடிநீர் திட்டங்களுக்காக 86 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 604 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.95 அடியாக உள்ளது. 687 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 800 கனஅடி நீர் திறக்–கப்படுகிறது. அணையில் 3212 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 56.58 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. பெரியாறு அணை 19, தேக்கடி 3 மி.மீ. மழை–யளவு பதவாகி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com