பழனி கோவில் நில மோசடி - சார்பதிவாளர், பெண் உதவி அலுவலர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பழனி கோயில்
Published on

பழனி கோவில்

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கடந்த 27ந் தேதி முதல் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தினந்தோறும் ஆஜராகி வருகிறார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஷஜீதா, டி.எஸ்.பி. அஜய்தங்கம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சி.பி.சி.ஐ.டி.

அதன்படி இன்று திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகும் ஜஸ்டின் மணிகண்டன் தனது முன்ஜாமினுக்கு பழனி நீதிமன்றத்தை அணுக உள்ளார்.

அவர் பணிபுரிந்த பழனி, கொடைக்கானல், தேனி, வடமதுரை, ஒட்டன்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடு பத்திரப்பதிவு செய்யப்பட்டதா? என தணிக்கை குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் அறிக்கை பத்திரப்பதிவு த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அதன்மீதான விசாரணை நடைபெற உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலவிஜய். இவர் தற்போது காஞ்சிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

மேல்மங்கலம் கிராமத்தில் பாலவிஜய்க்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் வீடு மற்றும் நிலத்தினை கட்ட தேவன் என்பவர் பராமரித்து வந்தார்.

பத்திரப்பதிவு

இந்த நிலையில் பாலவிஜய் தனது சொத்துக்களை விற்பனை செய்வதற்காக முயற்சித்தபோது கட்ட தேவன் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து பாலவிஜய் போல் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்து சொத்தை விற்பனை செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாலவிஜய் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது சொத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்ததாக கடந்த ஆண்டு புகார் அளித்துள்ளார்.

புகாரை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கட்டதேவன், ஈஸ்வரன் மற்றும் அப்போதைய பெரியகுளம் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஜெகதீஸ்வரன், ஓய்வு பெற்ற சிறப்பு ஆய்வாளர்கள் அம்மா வாசி, பாண்டியராஜன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் தற்போது தேனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி இன்று திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஏற்கனவே திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜஸ்டின் மணிகண்டன் இதுவரை பணி செய்த 10க்கும் மேற்பட்ட இடங்களில் மோசடி பதிவுகள் நடத்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்துள்ளதால் ஆவணங்கள் அனைத்தையும் சேகரிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பணியிடை நீக்கம்

இதனிடையே பழனி கோவில் நிலமோசடி வழக்கில் மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம்

இந்நிலையில் பழனியில் நிரந்தரமாக பணிபுரிந்து வந்த சார்பதிவாளர் பாலசந்தர், உதவி அலுவலர் சிவசங்கரி ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் பணிபுரிந்து வந்த பாலசந்தர் ஜூன் முதல் வாரத்தில்தான் பழனிக்கு மாறுதலாகி வந்துள்ளார். அவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய முடியாது என நிறுத்தி வைத்திருந்த ஆவணங்களை சரிபார்க்காமல் ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப்பதிவு செய்துள்ளார்.

ஆனால் விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு வந்த பாலசந்தர் இந்த முறைகேடு பத்திரப்பதிவை கண்காணிக்காமல் விட்டுள்ளார். அதன் காரணமாகவும் இந்த புகாரில் தகவல்களை மறைத்ததற்காக உதவி பெண் அலுவலர் சிவசங்கரியும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com