இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு உள்ளது- ஓ.பி.எஸ்

சசிகலா கொடுக்கும் விருந்துக்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை.பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.
இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு உள்ளது- ஓ.பி.எஸ்
Published on

வரும் பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.

வரும் 24ம் தேதி சசிகலா கொடுக்கும் விருந்துக்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் கட்டாயம் கலந்து கொள்வேன்.

அதிமுக கரைவேட்டி, கொடி பயன்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் அதிக அளவில் உள்ளது.

பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com