சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு: என்.ஆர்.தனபாலன் வரவேற்பு

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியத்தை உடனே வழங்கவேண்டும். தேர்தல் சமயத்தில் சிலிண்டர் விலை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுக்காத மத்திய அரசு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 விலையை குறைத்து அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு: என்.ஆர்.தனபாலன் வரவேற்பு
Published on

சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியத்தை உடனே வழங்கவேண்டும். அப்படி வழங்கும்பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயன்படுத்தும் லட்சக்கணக்கான குடும்பங்களும் கூடுதல் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் தேர்தல் சமயத்தில் சிலிண்டர் விலை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுக்காத மத்திய அரசு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 விலையை குறைத்து அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்த மத்திய அரசுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கி றேன்.

இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com