பிரபல துணிக்கடையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- வடமாநில வாலிபர் போக்சோவில் கைது

சிறுவர்களுக்கான ஆடைகள் விற்பனை செய்யப்படும் பகுதியில், பெற்றோர் தங்களது மகளுக்கு துணிகளை தேர்வு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
கைது
கைது
Published on: 
Summary

பிரபல துணிக்கடையில் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்ட பீகாரை சேர்ந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்குன்றம் பகுதியை சேர்ந்த தம்பதி, தங்களது 6 வயது மகளுக்கு புத்தாடைகள் வாங்குவதற்காக பாடியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அங்கு சிறுவர்களுக்கான ஆடைகள் விற்பனை செய்யப்படும் பகுதியில், பெற்றோர் தங்களது மகளுக்கு துணிகளை தேர்வு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை

அப்போது, அந்த கடையில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹசிசூல் ஹக் (23) என்பவர், சிறுமியிடம் தவறான நோக்கத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் இதனை கவனித்ததும் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் அந்த வாலிபரை உதைத்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புகார்

போலீசார் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பாக புகார் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படும் ஹசிசூல் ஹக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட ஹசிசூல் ஹக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com