

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ்நாடு தலைவராக ஏ.எஸ்.ஏ. உமர் ஃபாரூக் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தலைவராக இருந்த நெல்லை முபாரக் தனது பதவியை ராஜினாமா செய்ததால், இடைக்கால தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்கான மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக நெல்லை முபாரக் கடிதம் வழங்கியதாகவும், ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவும் அக்கட்சியின் தேசிய தலைமை தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. தமிழ்நாடு இடைக்கால தலைவராக உமர் ஃபாரூக் நியமிக்கப்பட்டுள்ளார். இச்செய்தியை அக்கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே. ஃபைஸி உறுதிப்படுத்தியுள்ளார்.
எஸ்டிபிஐ நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.