அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை 4 நாட்களில் வெளியாகும்: நத்தம் விஸ்வநாதன்

மக்களின் பிரச்சனைகளை எதிரொலிக்கும் வகையில் முழுமையாக ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம். தமிழக மக்களின் முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை 4 நாட்களில் வெளியாகும்: நத்தம் விஸ்வநாதன்
Published on

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், பாராளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஆர்.பி. உதயகுமார், பா.வளர்மதி, செம்மலை, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், நத்தம் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களின் பிரச்சனைகளை எதிரொலிக்கும் வகையில் முழுமையாக ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம். தமிழக மக்களின் முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இன்னும் 4 நாட்களில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com