ஜனநாயகத்தின் மீதான கொடூரமான தாக்குதலை திமுக வன்மையாக கண்டிக்கிறது- மு.க.ஸ்டாலின்

சென்னை சென்டிரலில் திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்பு.மத்திய அரசை கண்டித்தும், கெஜ்ரிவாலை விடுவிக்க கோரியும் திமுகவின் போராட்டம்.
ஜனநாயகத்தின் மீதான கொடூரமான தாக்குதலை திமுக வன்மையாக கண்டிக்கிறது- மு.க.ஸ்டாலின்
Published on

அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து சென்னையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சென்டிரலில் திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது, மத்திய அரசை கண்டித்தும், கெஜ்ரிவாலை விடுவிக்க கோரியும் திமுகவின் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்," நாட்டின் தலைநகரில் ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள கொடூரமான தாக்குதலை திமுக வன்மையாக கண்டிக்கிறது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com