அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம்

மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.மாநில மாநாட்டு பணிகள் மற்றும் இல்லந்தோறும் இளைஞர் அணியின் பணிகள் பற்றி இதில் விவாதிக்கப்படுகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம்
Published on

சென்னை:

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட-மாநில-மாநகர அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கழக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

கலைஞரின் நூற் றாண்டை இளைஞர் அணி சார்பில் கொண்டாடுவது, இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டு பணிகள் மற்றும் இல்லந்தோறும் இளைஞர் அணியின் பணிகள் பற்றி இதில் விவாதிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com