கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மலிவு விலையில் உணவு- அமைச்சர் சிவசங்கர்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கூறி மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு.பள்ளி வேலை நேரங்களில் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மலிவு விலையில் உணவு- அமைச்சர் சிவசங்கர்
Published on

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆடிப்பெருக்கையொட்டி வரும் தொடர் விடுமுறையால் தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கூறி மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

பள்ளி வேலை நேரங்களில் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து கவனம் செலுத்தி கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com