

சட்டசபையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக கொறடா எ.வ.வேலு விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* மேகதாது அணை விவகாரத்தில் திமுக ஆட்சியில் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி இருக்கிறோம்.
* அரசியல் கூடாது, முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தான் மேகதாது தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளித்தது.
* மேகதாது விவகாரத்தில் உரிய நேரத்தில் முதல்வர் சரியான முடிவு எடுத்து தனித்தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
* திமுகவின் கோரிக்கையை ஏற்று முதல்வர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.
* முதலமைச்சர் விஜய்க்கு திமுக சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.
* மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் சரியானது.
* புதிய நடுவர் மன்றம் தேவை என்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து திமுக முடிவு எடுத்தது.
* மேகதாது அணை தீர்மானத்தை திசை திருப்ப முயற்சி நடைபெறுகிறது என்று கூறினார்.
மேலும், அமோனியா வாயு கசிவு காரணமாக 5 தொழிலாளர்கள் பலியான விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய எ.வ.வேலு, தொழிலாளர்களுக்கும் ஆலைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தான் விபத்துகளை தவிர்க்க முடியும் என்று கூறினார்.