புதிய நடுவர் மன்றத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை- அமைச்சர் என்.ஆனந்த்

மேகதாது விவகாரத்தில் சமரசம் இல்லை என என் ஆனந்த் கூறினார்.
TN Minister N.Anand
Published on

மாநிலத்தின் நதிநீர் உரிமையை காப்பதில் தவெக அரசு துளியும் சமரம் செய்யாது என உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன் என அமைச்சர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.

தமிழக விவசாயிகளை பாதுகாப்பதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர்," பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

மேகதாது அணைக்கு எதிரான புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என சிலர் கூறுகின்றனர். மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

மேகதாது அணை விவகாரத்தில் ஆபத்து இன்னும் நீங்கவில்லை. காவிரி ஆணையம் கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்ததாக கூறுவது தவறு.

காவிரி ஆணையம் கர்நாடகாவின் அறிக்கையை நிராகரிக்காமல் அப்படியே நீர்வளத்துறை ஆணையத்திற்கு அனுப்பி உள்ளனர்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com