வி.ஐ.டி. துணைத் தலைவருக்கு 'உலகத் தமிழர் மாமணி' விருது- மொரீஷியஸ் அதிபர் வழங்கி கவுரவம்!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய தமிழர்களுக்கு உலகத் தமிழர் மாமணி விருது வழங்கப்பட்டது.
VIT Deputy President
Published on

உலகத் தமிழர் பொருளாதார 13-வது மாநாடு மற்றும் உலகப் பொருளாதார உச்சி மாநாடு கடந்த 11 முதல் 13-ந் தேதி வரை மொரீஷியசில் நடைபெற்றது.

இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அரசு தலைவர்கள், அமைச்சர்கள், பொருளாதார வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் சர்வதேச முதலீடுகள், புதிய வணிக தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு, நிதி சேவைகள், சுகாதாரம், உயர்கல்வி, புத்தொழில்கள், உலகளாவிய வர்த்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக வேலூர் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் கலந்து கொண்டார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், சென்னை வளா்ச்சி கழகத்தின் தலைவரும் உலகத் தமிழா் பொருளாதார கழகத்தின் தலைவருமான வி.ஆா்.எஸ்.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் மொரீஷியஸ் அதிபர் தரம்பீர் கோகுல் கலந்து கொண்டு உயர்கல்வி சேவையை பாராட்டி வி.ஐ.டி. துணை தலைவர் சேகர் விசுவநாதனுக்கு உலகத் தமிழர் மாமணி விருதை வழங்கி சிறப்பித்தார்.

அதேபோல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய தமிழர்களுக்கு உலகத் தமிழர் மாமணி விருது வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com